கடம்பவனேஸ்வரர் கோவில்- எறும்பூர்
இக்கோவில் கி.பி 935- இல் முதலாம் பராந்தக சோழன் காலத்தில்
இருங்கோளன் குணவன் அபராஜிதன் என்பவனால் கற்றளியாகக் கட்டப்பட்டதை இங்குள்ள கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.
மேலும் இவ்வூர் உறுமூர் என்றும் இக்கோவில இறைவன் சிறு திருக்கோவில் பெருமானடிகள் என்றும் அழைக்கபட்டமை கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இக்கோயிலுள்ள மூன்று தேவ கோட்டச் சிற்பங்களும் தனித்தன்மையை வாய்ந்தவை. தெற்கில் ஞானதட்சினமூர்த்தி வீராசனத்தில் காட்சியளிகின்றார். மேற்கில் சிவன் யோகியாகவும், வடக்கில் பிரம்ம யோகியாகவும் அமர்ந்துள்ளனர்.
இது தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது
இக்கோவில் ஊருக்குள் இருந்தாலும் இங்கு இருக்கும் கோஷ்ட்ட தெய்வங்கள் யோகநிலையில் உள்ளதை பார்க்கும்போது இந்த இடம் சாதரணமாக இருந்திருக்க வாய்ப்பு இல்ல. கடம்பவனம் நிறைந்த இடமாக அந்த காலகட்டத்தில் இருந்திருக்கலாம். யோகிகளும் ரிஷிகளும் இங்கு தவம் செய்திருக்கலாம்.
நல்ல ஒரு அமைதியான சூழல், அரசமரம் காற்றும், கோவிலின் அமைதியும் நம் மனதை லேசகா மாற்றிவிட்டதை நான் உணர்தேன். நான் சென்று அனுபவித்ததை நீங்களும் சென்று அனுபவியுங்கள.
No comments:
Post a Comment