ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் தனித்தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. பின்னர், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபாக்கும் பணியும் நடைபெற்றது. எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
www.dge.tn.nic.in,
www.dge.tn.gov.in
ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment