Sunday, 27 May 2018

தொட்டமுதுகரை நடுகல்

தொட்ட முதுகரை என்ற கிராமத்தில் வயல்வெளியில்16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று வீரர்கள் நடுகல் கண்டுபிடிக்கபட்டது. கன்னட மொழி கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ள மூன்று நிலை நடுகல் தங்கள் ஊர் எல்லையை  காக்க ஏற்பட்ட.பூசலில் உயிர் நீத்த வீரர்களுக்கான நடுகல் எனலாம் இதனை ஆய்வாளர்கள் (ur- alivu) என்பர்.

கீழிருந்து மேலாக

முதல்நிலை÷  வீரர்களிருவர்  வாள், மற்றும் வில் அம்புகளுடன் போர் புரியும் காட்சி அருகே காட்டு பன்றியின் மேல் வேட்டைநாய் கடிப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை ÷ 

இப்போரில் உயிர் துறந்த மூன்று வீரர்களின் ஆன்மாக்களை தேவ கன்னிகையர் மேலுலகம் அழைத்து செல்லும் காட்சி.

மூன்றாம் நிலை ÷

சிவலோகத்தில் லிங்கம் மற்றும் நந்தியினருகே மூவரும் அமர்ந்த நிலையில் இறையை வணங்கும் வண்ணம் காணப்படுகிறார்கள் .


Sunday, 20 May 2018

ஊர்களின் பெயரும் அதன் தோற்றமும்

சில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.


தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது


பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது


வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது


செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது


எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது


குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது


உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?


ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது


ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்


விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே


வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""

வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல


தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்


கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்


பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும் 

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது


மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது

மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,


குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்


நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்


நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.


வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.


தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.


மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்


ஏர்க்காடு


சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.


திருகோணமலை


இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


குடிதனைப் பெருக்கிக்

கொடிதனை நெருக்கி வாழும்

கோணமாமலை....


என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.

Friday, 18 May 2018

தபால்தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ 8000 பரிசு

வரும் கல்வியாண்டு முதல் அரிய வகை தபால் தலை சேகரிப்புக்கு ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை : 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்


தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு முதல் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால் ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தபால்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அரசு சார்பில் தபால்துறை மூலமாக ‘தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் வரும் கல்வியாண்டு முதல் அரிய வகை தபால்தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 


அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அரிய வகை தபால் தலைகளை சேகரித்து தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு பொதுஅறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். இதில் தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வில் 25 மதிப்பெண்கள் என்று 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். 


இதில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறந்த 10 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 40 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக தலா ₹8 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்கான தேர்வு தபால்துறை மூலம் நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.


Thursday, 17 May 2018

TRB பொது தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகம் பிளிப்கார்ட் ஆப்பர்ஸ்

TRB பொது தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகம் பிளிப்கார்ட் ஆப்பர்ஸ்

TRB பொது தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகம் பிளிப்கார்ட் ஆப்பர்ஸ்

CLICK

CLICK
CLICK
CLICK

பொது தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகம் பிளிப்கார்ட் ஆப்பர்ஸ்

பொது தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகம் பிளிப்கார்ட் ஆப்பர்ஸ்

பள்ளி மாணவர்களுக்கான பிளிப்கார்ட் ஆப்பர்ஸ்

பள்ளி மாணவர்களுக்கான பிளிப்கார்ட் ஆப்பர்ஸ் 
 SCHOOL OFFERS FLIPKART

Chris & Kate CKB_122SS Waterproof School Bag



BEST OFFERS FLIPKART


NEW OFFERS

BEST PRINTER CLICK

Samsung 24 inch Curved Full HD LED

Wednesday, 16 May 2018

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் தனித்தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். 

இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. பின்னர், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபாக்கும் பணியும் நடைபெற்றது. எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

www.dge.tn.nic.in, 

www.dge.tn.gov.in 

ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.