Sunday 27 May 2018

தொட்டமுதுகரை நடுகல்

தொட்ட முதுகரை என்ற கிராமத்தில் வயல்வெளியில்16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று வீரர்கள் நடுகல் கண்டுபிடிக்கபட்டது. கன்னட மொழி கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ள மூன்று நிலை நடுகல் தங்கள் ஊர் எல்லையை  காக்க ஏற்பட்ட.பூசலில் உயிர் நீத்த வீரர்களுக்கான நடுகல் எனலாம் இதனை ஆய்வாளர்கள் (ur- alivu) என்பர்.

கீழிருந்து மேலாக

முதல்நிலை÷  வீரர்களிருவர்  வாள், மற்றும் வில் அம்புகளுடன் போர் புரியும் காட்சி அருகே காட்டு பன்றியின் மேல் வேட்டைநாய் கடிப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை ÷ 

இப்போரில் உயிர் துறந்த மூன்று வீரர்களின் ஆன்மாக்களை தேவ கன்னிகையர் மேலுலகம் அழைத்து செல்லும் காட்சி.

மூன்றாம் நிலை ÷

சிவலோகத்தில் லிங்கம் மற்றும் நந்தியினருகே மூவரும் அமர்ந்த நிலையில் இறையை வணங்கும் வண்ணம் காணப்படுகிறார்கள் .


No comments:

Post a Comment